Paristamil Navigation Paristamil advert login

பெற்றோல், டீசல் 'விலை வீழ்ச்சி' தொடர்கிறது..!!

பெற்றோல், டீசல் 'விலை வீழ்ச்சி' தொடர்கிறது..!!

13 பங்குனி 2025 வியாழன் 08:00 | பார்வைகள் : 3401


இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பெற்றோல் - டீசல் போன்றவற்றின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இந்த விலை வீழ்ச்சி பதிவாகி வருவதாக அவதானிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது டீசல் ஒரு லிட்டர் €1.66 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 2.7 சதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, 95-E10 ரக பெற்றோல் €1.71 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் 2.5 சதம் குறைவாகும்.

உலக சந்தையில் ஒரு பரல் கச்சா எண்ணையின் விலை 72.4 அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையாகிறது. ஒரு வாரத்தில் விலை 1.9 டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது. உலக சந்தையில் இந்த கச்சா எண்ணிக்கை இவ்வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 16% சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்