இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என கணிப்பு
13 பங்குனி 2025 வியாழன் 20:25 | பார்வைகள் : 3438
அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதம் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மூடிஸ் ரேட்டிங்ஸ் சர்வதேச நிறுவனம் கூறியிருப்பதாவது: கடந்த 2024ம் ஆண்டு நிதியாண்டின் இடையில் இந்திய பொருளாதார வளர்ச்சி தற்காலிகமாக சரிந்தது. தற்போது, இந்திய பொருளாதார வளர்ச்சி மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளில் இந்தியாவின் வளர்ச்சி அதிகவேகமாக இருக்கும்.
கடந்த நிதியாண்டில் 6.3 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, அடுத்த நிதியாண்டில் 6.5 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய வங்கிகளின் செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருக்கின்றன. கடந்த ஆண்டுகளில் இந்திய வங்கிகளின் சொத்துத் தரம் கணிசமாக மேம்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டுகளில் அதிகரித்து வந்த, ரெப்போ வட்டி விகிதம், பிப்., மாதம் 0.25 சதவீதம் ஆர்.பி.ஐ., குறைத்துள்ளது.
அரசின் மூலதன செலவு, நடுத்தர வருமானம் பெறும் மக்களுக்கான வரி விலக்கினால் நுகர்வை ஊக்குவித்தல் உள்ளிட்ட காரணங்களால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 6.3 சதவீதத்தில் இருந்து, 2025-26 நிதியாண்டில் 6.5 சதவீதமாக அதிகரிக்கும். இந்த நடவடிக்கைகள் இந்திய பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த உதவும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan