ஆயுததாரி சுட்டுக் கொலை, காவல்துறையினர் மீது விசாரணை.

12 பங்குனி 2025 புதன் 09:31 | பார்வைகள் : 5680
பிரான்சின் Pyrénées-Atlantiques பிரதேசத்தில் உள்ள Bayonne வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி Bidart நகரில் avenue du Plateau வீதியில் உள்ள Erretegia சீஸ் தொழிற்சாலைக்குள் கோமாளிகள் போன்ற முகமூடி அணிந்த நபர் ஒருவர் கைத்துப்பாக்கி, கத்தி, வாள் போன்ற ஆயுதங்களுடன் உள்நுழைந்துள்ளார், குறித்த ஆயுததாரி அங்கு கடமையில் இருந்த கணக்காளரை பணயக்கைதியாக்கி காவல்துறையினரை அழைக்கும் படி பணித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு வருகைதந்த காவல் துறையினர் ஆயுததாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆயுததாரி காவல்துறையினர் மீது கொலை முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதனைத் சுதாரித்து கொண்டு காவல்துறை அதிகாரி அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார், இதனால் ஆயுததாரி அந்த இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து Pyrénées-Atlantiques பிரதேசத்தில் உள்ள Bayonne வழக்கறிஞர் அலுவலகம் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஒன்று ஆயுததாரி எதற்காக இவ்வாறான சம்பவத்தில் ஈடுபட்டார்? எனும் கோணத்தில் ஒரு விசாரணையும், அடுத்து ஏவ்வாறன ஆப்பத்தை சமாளிக்க காவல்துறையினர் அவர்மீது துப்பாக்கி சூடு நடத்தியது எனும் கோணத்தில் மற்றும் ஒரு விசாரணையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இது ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லை எனவும், குறித்த சம்பவத்தில் காவல்துறையினர் யாரும் காயமடையவில்லை எனவும் Bayonne வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1