யாழில் வாள்களுடன் சிக்கிய இளைஞர்கள்
12 பங்குனி 2025 புதன் 08:09 | பார்வைகள் : 5588
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொக்குவில் பகுதியில் கடந்த 03ஆம் திகதி இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டில் இளைஞனின் கைவிரல் துண்டாட்டப்பட்டது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் , மூன்று இளைஞர்களை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப்பொருள், மூன்று கஜேந்திரா வாள்கள் உள்ளிட்ட ஏழு வாள்கள், இரண்டு அதிநவீன மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் யாழ்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan