மகளையும் சுட்டுத் தன்னையும் சுட்ட தந்தை!!
11 பங்குனி 2025 செவ்வாய் 20:50 | பார்வைகள் : 8805
இந்தக் கொடூரச் சம்பவம் மார்செய் நகரை உள்ளடக்கிய Bouches-du-Rhône மாநிலத்தின் Fos-sur-Mer நகரத்தில் நடந்தேறியுள்ளது.
தனது 16 வயது மகளைத் தனது வேட்டைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக் கொண்டுள்ளார் ஒரு தந்தை. 16 வயதுடைய தனது மகளைச் சுட்டுவிட்டு அவசர சிகிச்சைப்பிரிவினரை அழைத்து விட்டு, அதே வேட்டைத் துப்பாக்கியால் தன்னையும் வயிற்றில் சுட்டுள்ளார்.
ஆனாலும் அவசர சிகிச்சைப்பிரிவினர் ஆபத்தான நிலையில் இருந்த தந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தனது மகள் படியில் தவறி வீழ்ந்து விட்டதாகத் தெரிவித்தே, இவர் அவசர சிகிச்சைப் பிரிவினரை அழைத்திருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது துணைவியாருடன் ஏற்பட்டுள்ள விவாகரத்து நடவடிக்கையில் ஏற்பட்ட விரக்தியே தன் தற்கொலைக்கும் கொலைக்கும் காரணம் என அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தினைக் காவற்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan