Paristamil Navigation Paristamil advert login

தனியார் பாடசாலைகளில் வெளிப்படை தன்மை உருவாக்கப்படும் - தேசிய கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

தனியார் பாடசாலைகளில் வெளிப்படை தன்மை உருவாக்கப்படும் - தேசிய கல்வி அமைச்சர் அறிவிப்பு!!

11 பங்குனி 2025 செவ்வாய் 20:00 | பார்வைகள் : 2415


தனியார் பாடசாலைகளிலும், இலாபமற்ற பாடசாலைகளிலும் வெளிப்படைத்தன்மை ஒன்றை உருவாக்கப்படும் என தேசிய கல்வி அமைச்சர் Elisabeth Borne அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்களைக் கொண்ட்டு, 200,000 இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டிருக்கும் Galileo Global Education
நிறுவனத்தின் தலைவருக்கும் - தேசிய கல்வி அமைச்சர் Elisabeth Borne மற்றும் உயர்கல்வி அமைச்ச்சர் Philippe Baptiste ஆகியோருக்கும் இடையே நேற்று மார்ச் 10 ஆம் திகதி மாலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

சந்திப்பின் முடிவில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த Elisabeth Borne, ”தனியார் இலாப நோக்கற்ற உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும்” என குறிப்பிட்டார்.

மேற்குறித்த கலீலியோ கல்வி நிலையம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அண்மையில் எழுந்திருந்தன. மாணவர்கள் மன அழுத்தத்துடன் இருப்பதாகவும், பல மாணவர்கள் மன அழுத்தத்துக்கான மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதை அடுத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்