Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவுக்கு வருகை தருகிறார் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி

இந்தியாவுக்கு வருகை தருகிறார் அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி

11 பங்குனி 2025 செவ்வாய் 05:39 | பார்வைகள் : 1359


இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.

அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பல நாடுகளின் பயணத்தின் ஒரு பகுதியாக துளசி கப்பார்ட் இந்தியாவுக்கு வருகை தருகிறார். இது, டிரம்ப் நிர்வாகத்தின் கீழ், வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவரின் முதல் வருகையாகும்.

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நான் இந்தோ-பசிபிக் பகுதிக்கு பல நாடுகள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும். நான் ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தியாவுக்குச் செல்வேன்.

மீண்டும் வெள்ளை மாளிகைக்கு திரும்பும் வழியில் பிரான்சிற்கு செல்ல உள்ளேன். அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம். பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்