தங்கள் DNA-ஐ திருத்தி நிரந்தரமாக வாழ பெரும் கோடீஸ்வரர்கள் படையெடுக்கும் ஒரு ரகசிய தீவு
10 பங்குனி 2025 திங்கள் 09:15 | பார்வைகள் : 2526
கரீபியனில் அதிகம் அறியப்படாத தீவு ஒன்று, நிரந்தரமாக உயிர் வாழ விரும்பும் பெரும் கோடீஸ்வரர்களுக்கான மெக்காவாக மாறி வருகிறது.
எந்த வகையான சட்டச் சிக்கலும் இன்றி இங்கே முன்னெடுக்கப்படும் மரபணு சிகிச்சையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. ஹோண்டுராஸின் வடக்கு கடற்கரையிலிருந்து 40 மைல் தொலைவில் அமைந்துள்ள ரோட்டன் தீவு, இங்குள்ள ப்ரோஸ்பெரா நகரமே பெரும் கோடீஸ்வரர்களின் சொர்க்கம்.
வெனிசுலாவில் பிறந்த பெரும் கோடீஸ்வரர் Erick Brimen என்பவரின் கனவுத் திட்டமே இந்த ப்ரோஸ்பெரா நகரம். ஒற்றை இலக்க வரி விகிதங்கள், பிட்காயின் ஏற்றுக்கொள்ளப்படும். மற்றும் பல்வேறு அதிநவீன, ஆனால் அங்கீகரிக்கப்படாத எந்த விதிமுறைகளும் இல்லாத மருத்துவ நடைமுறைகளும் பின்பற்றப்படுகிறது.
மரபணு சிகிச்சையே இங்கு பிரபலமாக உள்ளது. அமெரிக்க FDA அமைப்பால் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்பதுடன் சட்டத்திற்கு புறம்பானது என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய சிகிச்சைக்கான கட்டணம் 25,000 டொலர் என்றே கூறப்படுகிறது. உடல் தன்னைத்தானே சரிசெய்து கொள்ள ஊக்குவிக்கும் DNA மூலக்கூறுகளை ஒரு ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது.
இதன் தாக்கம் 2 ஆண்டுகள் வரையில் நீடிக்கும் என்றும் கூறுகின்றனர். ஃபோலிஸ்டாடின் மரபணு சிகிச்சை எலிகளின் ஆயுட்காலத்தை 32.5 சதவீதம் நீட்டிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
2024 தொடக்கத்தில் ஃபோலிஸ்டாடின் மரபணு சிகிச்சை எடுத்துக்கொண்ட பிரியான் ஜான்சன் என்பவர் தெரிவிக்கையில், இதுவரையான முடிவுகளில் தாம் ஈர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மரபணு சிகிச்சையுடன், ப்ரோஸ்பெராவில் உள்ள அதே மருத்துவமனை ஸ்டெம் செல் சிகிச்சையையும் வழங்குகிறது. ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை என்பது ஒரு முறை மட்டுமே செய்யப்படும் செயல்முறை அல்ல, ஒரு சிகிச்சைக்கு 20,000 அமெரிக்க டொலர் வரையில் செலவாகும் என்பதால் பலரால் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அதைச் செய்ய முடியும்.
கடந்த 2017ல் Erick Brimen என்பவர் ப்ரோஸ்பெரா நகரை உருவாக்க பதிவு செய்துள்ளார். தற்போது 200 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளதுடன், 58 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட இந்த தீவை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளனர்.
2030க்குள் 38,000 குடிமக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் திட்டத்தை Erick Brimen முன்னெடுத்து வருகிறார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan