Paristamil Navigation Paristamil advert login

கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி!

கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி!

10 பங்குனி 2025 திங்கள் 07:40 | பார்வைகள் : 7516


கனடாவின் லிபரல் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெற்றி பெற்றதற்குப் பின்னர் அவர் உற்சாகமான உரையாற்றி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கனடாவின் கன்சர்வேட்டிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரை எதிர்கொள்ள உறுதியளித்தார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகியதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில், மார்க் கார்னி முதல் வாக்குகெடுப்பிலேயே 85.9% வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தார்.

இரண்டு மாதங்களாக முன்னணியில் இருந்த அவர், விரைவில் கனடாவின் 24வது பிரதமராக பதவியேற்க உள்ளார்.

லிபரல் கட்சியின் தலைவர் தேர்தலில், முன்னாள் நிதி அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட் 8% வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில், முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் கரினா கோல்ட் மற்றும் வணிகர் ஃப்ராங்க் பேய்லிஸ் தலா 3% வாக்குகளுடன் மூன்றாம், நான்காம் இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்