16 வயது மகளை சுட்டுக்கொன்ற தந்தை! - பெரும் பரபரப்பு!!
10 பங்குனி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 10384
16 வயதுடைய பெற்ற மகளை தந்தை ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் தெற்கு பிரான்சில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
53 வயதுடைய தந்தை ஒருவர், அவரது 16 வயதுடைய மகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார். பின்னர் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் மருத்துவக்குழுவினர் அவரை மீட்டு உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேற்படி சம்பவம் Fos-sur-Mer (Bouches-du-Rhône) நகரில் நேற்று முன் தினம் சனிக்கிழமை (மார்ச் 8) இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூடு இடம்பெற்றமைக்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. வேட்டைக்கு பயன்படுத்தப்படும் ரைஃபிள் வகை துப்பாக்கியினை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு இடம்பெறதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

























Bons Plans
Annuaire
Scan