யாழில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபருக்கு நேர்ந்த கதி
9 பங்குனி 2025 ஞாயிறு 07:26 | பார்வைகள் : 6196
யாழ்ப்பாணத்தில் கல்சியம் நீக்கி திரவத்தை அருந்திய நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை யாழ்ப்பணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கச்சாய் தெற்கு, கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் வெள்ளிக்கிழமை அவரது வீட்டில் இருந்த கல்சியம் நீக்கி திரவத்தை அருந்தியுள்ளார். இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan