Paristamil Navigation Paristamil advert login

இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

9 பங்குனி 2025 ஞாயிறு 06:58 | பார்வைகள் : 5056


சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 13,000 சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்று  அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக விமான நிலையப் பிரிவின் அதிகாரிகளால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கண்டி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்