கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

9 பங்குனி 2025 ஞாயிறு 03:28 | பார்வைகள் : 3739
சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி விதை பல மருத்துவ குணங்களை கொண்டது. இதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் குடித்தால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
கொத்தமல்லி விதை தண்ணீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரி நேடிக்கல்களை எதிர்த்து போராடி உடலை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கின்றன.
இதில் உள்ள வைட்டமின் ஏ,சி மற்றும் கே முடி ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அதனால் கொத்தமல்லி விதைகளை ஊற வைத்த தண்ணீரை குடிப்பதால் முடி உதிர்வது குறையும்.
ஊறவைத்த கொத்தமல்லி விதை தண்ணீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றம் பிற ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள ஈயம் மற்றும் பாதரசம் போன்ற நச்சுக்களை வெளியேற்றும். இதனால் கல்லீரம் ஆரோக்கியம் மேம்படும்.
மாதவிடாய் காலங்களில் கொத்தமல்லி விதை தண்ணீரை குடிப்பதால் வயிற்று வலி மற்றும் பிடிப்புகள் குறையும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலிமிகுந்த பிடிப்புகளை குறைக்கும்.
கொத்தமல்லி விதை தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி செரிமான சக்தியை அதிகரிக்கிறது. இதனால் உண்ணும் உணவு நன்கு ஜீரணமாகும். உடல் எடை குறையும்.
ரத்த சர்க்கரை குறைக்கும் பண்புகள் கொத்தமல்லிவிதைகளில் உள்ளது. இதனால் கொத்தமல்லி விதை தண்ணீரை தினமும் குடிப்பது இன்சுலின் உணர்திறனை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை குறைக்கும். இங்கு வழங்கப்பட்டவை மருத்துவ தகவல் மட்டுமே இவற்றை பின்பற்றுவதற்கு முன் அவசியம் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1