எனது பதவியை விரைவில் பெண்ணுக்கு வழங்குவேன் - ராமநாதன் அர்ச்சுனா

8 பங்குனி 2025 சனி 16:31 | பார்வைகள் : 2048
தனது பதவியை விரைவில் பெண் ஒருவருக்கு வழங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டிலே பெண்கள் 25 வீதம் இருக்கின்றனர். ஆனால் நாடாளுமன்றத்திலே 9.8 வீதமான பெண் உறுப்பினர்களே காணப்படுகின்றனர்.
அதனை நான் 10 சதவீதமாக மாற்றுவேன். எதிர்வரும் ஒகஸ்ட் அல்லது செப்டெம்பர் மாதமளவில் நாடாளுமன்றத்திலிருந்து விலகி பெண் ஒருவருக்குக் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
இதேவேளை இராணுவத்தினரின் குடும்பங்களுக்காகப் பாதீட்டில் அதிக நிதியை ஒதுக்கியுள்ள அரசாங்கம் வட கிழக்கிலுள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அநீதி இழைத்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.