இலங்கையில் தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணன்
8 பங்குனி 2025 சனி 11:15 | பார்வைகள் : 11227
எலபாத்த காவல்துறைக்குட்பட்ட அலுபத்கல பகுதியில் இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அலுபத்கல பகுதியில் இரு சகோதரருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதில் மூத்த சகோதரர் தம்பி மீது கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் அலுபத்கல, உடனிரிஎல்ல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் மூத்த சகோதரருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது என ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் மூத்த சகோதரனான சந்தேக நபர் மனநோய்க்காகச் சிகிச்சை பெற்றுவருவதாக அவரது தாயார் தெரிவித்துள்ளதுடன் சந்தேக நபர் அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைது செய்வதற்காக எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
2






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan