இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள எஸ்.பி.சரண் !

8 பங்குனி 2025 சனி 10:52 | பார்வைகள் : 1779
மறைந்த பிரபல பின்னனி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி. சரண். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். இது அல்லாமல் சரோஜா, துரோகி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சென்னை 28, மழை, ஆரண்ய காண்டம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
தற்போது எஸ்.பி.சரண் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அரசியல் கதைகளத்தை பின்புலமாக கொண்டு உருவாகி வருகிறது. படமாக அல்லாமல் வெப் தொடராக தயாராகிறது. இதற்கு 'அதிகாரம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் அதுல்யா ரவி, அபிராமி, தேவ், அரவிந்த் ஆகாஷ், ஜான் விஜய் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்போது இந்த வெப்தொடர் இறுதிகட்டத்தில் உள்ளது