சூர்யா இன்றி ஆரம்பமான வாடிவாசல்!

7 பங்குனி 2025 வெள்ளி 10:14 | பார்வைகள் : 1332
சூர்யா நடிப்பில் தற்போது ரெட்ரோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். இந்த படம் மே 1ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், தரக் பொன்னப்பா, தமிழ், கிருஷ்ணகுமார் பாலசுப்ரமணியன், பிரேம் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். ஜாக்கி மற்றும் மாயாபாண்டி கலை இயக்குனர்களாக பணியாற்றுகிறார்கள்.
பிரவீன் ராஜ் ஆடை வடிவமைப்பாளராகவும், கெச்ச காம்ஃபக்டே சண்டைக் காட்சிகளை வடிவமைக்கிறார். 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்கள் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன், கார்த்திகேயன் சந்தானம். வினோத் சுகுமாரன் ஒப்பனையும், சுரேஷ் ஜி மற்றும் அழகியகூத்தன் ஒலி வடிவமைப்பும், ஷெரீப் எம் நடனமும், முகமது சுபைர் உடைகளும், தினேஷ் எம் புகைப்படங்களும், டூனே ஜான் விளம்பர வடிவமைப்புகளும், சுரேஷ் ரவி வண்ணங்களும், பி செந்தில் குமார் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், கணேஷ் பி எஸ் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகிறார்கள்.
இதுதவிர சூர்யாவின் 45வது படமும் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். சூர்யா கடைசியாக நடித்த கங்குவா படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். சூர்யா டைட்டில் ரோலில் நடித்திருந்தார். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அவரின் கம்பேக்குக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.