வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட சிகரெட் பெட்டிகளுடன் யாழில் சிக்கிய இளைஞன்
6 பங்குனி 2025 வியாழன் 14:10 | பார்வைகள் : 4646
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட 160 சிகரெட் பெட்டிகளுடன் யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பேருந்து நிலையத்தில் இளைஞன் ஒருவர் ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுடன் உலாவி திரிவதாக அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்தனர்.
அதன் போது இளைஞனிடம் இருந்த பையில் இருந்து 160 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அவற்றின் பெறுமதி சுமார் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இளைஞனை அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan