கனடாவில் தீ விபத்து - ஆறு கட்டிடங்கள் முற்றாக தீக்கிரை
6 பங்குனி 2025 வியாழன் 04:17 | பார்வைகள் : 4658
டொரொண்டோ யோர்க்வில் (Yorkville) பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆறு கட்டிடங்கள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளன.
மேலும், பல கட்டிடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Scollard Street-ல் அமைந்துள்ள ஒரு கட்டடத்திலேயே அதிகாலை 4:30 மணிக்கு தீ ஆரம்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கட்டிடம் புனரமைக்கப்பட்டு வந்த நிலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தீ வேகமாக அருகிலுள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்களுக்கு பரவியது.
தீ கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் இன்னும் சிறிய தீப்புள்ளிகளை அணைக்கும் பணியில் உள்ளனர்.
மொத்தம் 10 கட்டிடங்கள் தீயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகால பழமை வாய்ந்த கட்டிடங்கள் இழந்தது பொருளாதார ரீதியாக பெரும் இழப்பாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan