கட்டுநாயக்க விமான நிலையத்தில் பால் மாவுடன் கைதான பெண்

5 பங்குனி 2025 புதன் 10:36 | பார்வைகள் : 2969
உடலை வெள்ளையாக்குவதற்கு பயன்படுத்தப்படும் டின்னில் அடைக்கப்பட்ட விட்டமின் அடங்கிய பால் மாவுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சட்டவிரோதமான முறையில் 179 டின்னில் அடைக்கப்பட்ட பால் மா இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட டின்னில் அடைக்கப்பட்ட பால் மா 18 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்தவர் எனவும் மற்றைய நபர் நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும் சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.