டொரோண்டோ பெரும் பகுதியில் வெள்ள அபாயம்
5 பங்குனி 2025 புதன் 08:06 | பார்வைகள் : 8610
டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்களுக்கு வெள்ள அபாயம் காரணமாக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம், மற்றும் இயற்கை உறைபனி மேற்பரப்புகளில் நுழைய வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் ஒரு சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
மழை மற்றும் மிதமான வெப்பநிலைகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.
தேசிய வானிலை நிறுவனத்தின் தகவலின்படி, செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை 15 முதல் 25 மிமீ வரை கனமழை பெய்யும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனால், கீழ்நிலப் பகுதிகளில் உள்ளூர் வெள்ளம் மற்றும் சாலைகளில் நீர் தேங்கும் நிலை ஏற்படலாம்.
இன்றும் நாளையும் கனமழை மற்றும் மிதமான வெப்பநிலை நிலவும் எனவும் புதன்கிழமை பிற்பகல் மற்றும் மாலை கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் 25 மிமீ-ஐ கடக்கும் மழைப்பொழிவு நிகழலாம்," என்று வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நிலம் உறைந்துள்ளதால், அதிகளவான மழையை உறிஞ்சும் திறன் குறைந்துள்ளது," என வானிலை அறிவிப்பு தெரிவிக்கிறது.
டொரோண்டோவில் வியாழக்கிழமை மழை அல்லது பனித்துளிகள் பொழியும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வார இறுதிக்குள் வெயில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan