இந்தியா vs அவுஸ்திரேலியா - சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?

4 பங்குனி 2025 செவ்வாய் 10:22 | பார்வைகள் : 2266
இன்றைய அரையிறுதி போட்டியில் சச்சினின் சாதனையை முறியடிக்க ரோஹித் ஷர்மாவிற்கு வாய்ப்புள்ளது.
துபாய் மற்றும் பாகிஸ்தானில் 2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய அரையிறுதி போட்டியில் இந்திய அணி, அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா, சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றை முறியடிக்க வாய்ப்புள்ளது. இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 54 போட்டிகளில் அணித்தலைவராக ஆடியுள்ள ரோஹித் சர்மா, அந்த போட்டிகளில் 2,402 ஓட்டங்களை எடுத்துள்ளார்.
முன்னதாக சச்சின் டெண்டுல்கர், 73 ஒருநாள் போட்டிகளில் அணிக்கு தலைமை தாங்கி 2,454 ஓட்டங்களை எடுத்துள்ளார். இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா, 52 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தால் சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளது.
இந்த பட்டியலில் சச்சினுக்கு முன்னதாக தோனி(6641), விராட் கோலி (5449), முகமது அசாருதீன் (5239), சவுரவ் கங்குலி (5082), ராகுல் டிராவிட் (2658) ஆகியோர் உள்ளனர்.
ரோஹித் சர்மா இன்றைய போட்டியில் 52 ஓட்டங்கள் எடுத்தால் இந்த பட்டியலில் 6 வது இடம் பிடிப்பார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இன்றைய அரையிறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அல்லது நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1