Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று…

கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று…

4 பங்குனி 2025 செவ்வாய் 10:10 | பார்வைகள் : 2597


கனடாவில் வௌவால் ரேபீஸ் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஹமில்டன் பகுதியில் நோய்த் தொற்றுக்கு இலக்கான ஒருவர் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹமில்டன் பொதுச் சுகாதார அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டில் பதிவான முதல் வௌவால் ரேபிஸ் தொற்று இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.

வௌவால்கள் மற்றும் ஏனைய விலங்குகளின் அருகாமைக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

சில விலங்குகளின் ஊடாக இந்த ரேபீஸ் வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரேபீஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்