Paristamil Navigation Paristamil advert login

மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: வக்ப் மசோதா குறித்து பிரதமர் மோடி கருத்து

மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: வக்ப் மசோதா குறித்து பிரதமர் மோடி கருத்து

4 சித்திரை 2025 வெள்ளி 13:47 | பார்வைகள் : 1002


இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ப் திருத்த சட்ட மசோதா, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

வக்ப் வாரிய சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று ராஜ்யசபாவில் நீண்ட விவாதத்திற்கு பின் நடந்த வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. இது குறித்து, தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:

பார்லிமென்டில் இரு அவைகளாலும் வக்ப் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப் பட்டிருப்பது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். நாட்டின் சமூக பொருளாதார நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் வக்பு மசோதா ஒரு திருப்பு முனை. பல தசாப்தங்களாக, வக்ப் அமைப்பு வெளிப்படைத்தன்மையுடன் இல்லாமல் இருந்தது.

வக்ப் திருத்த சட்ட மசோதா மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும் முன்னுரிமை அளிப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதன் மூலம் நாம் இரக்கமுள்ள, வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்