வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இனி பாடல்களையும் வைக்க முடியும்

3 சித்திரை 2025 வியாழன் 16:44 | பார்வைகள் : 3781
வாட்ஸ் அப் செயலியில்(WhatsApp) இன்ஸ்டாகிராம் போன்று ஸ்டேட்டசில்(Status) பாடல்களை வைக்கும் வகையில் மெட்டா புதிய புதுப்பிப்பு(update) ஒன்றை மேம்படுத்தியுள்ளது.
புகைப்படம் ஒன்றை பதிவிட்டுவிட்டு பாடல்களை ஒலிக்க வைக்கும் வகையில் இந்த புதுப்பிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய புதுப்பிப்பு, வாட்ஸ் அப் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுவதாக மெட்டா கூறியுள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வாட்ஸ் அப் செயலியை வருகிறார்கள்.
குறுஞ்செய்தி அனுப்பும் தளமாக முதலில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கையகப்படுத்தியதில் இருந்து பல்வேறு புதுப்பிப்புக்களை செய்து வருகிறது.
ஒலி, ஒளி, pdf அனுப்பும் வசதி, காணொளி, புகைப்படங்களை ஸ்டேட்டசாக வைக்கும் வசதி என பலப்பல புதுப்பிப்புக்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டன.
கையடக்க தொலைபேசிகளில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப் தற்போது குறித்த புதுப்பிப்பையும் வழங்கியுள்ளது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1