Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : 'Histoire d'Or' நகைக்கடை கொள்ளை!!

பரிஸ் : 'Histoire d'Or' நகைக்கடை கொள்ளை!!

3 சித்திரை 2025 வியாழன் 11:08 | பார்வைகள் : 3041


பரிஸ் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள Histoire d'Or எனும் நகைக்கடை கொள்ளையிடப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 1, செவ்வாய்க்கிழமை காலை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Montparnasse  கட்டிடத்துக்கு அருகே உள்ள  rue de Rennes வீதியில் இந்த நகைக்கடை அமைந்துள்ளது. முற்பகல் 11 மணி அளவில் கடைக்குள் ஆயுதத்துடன் நுழைந்த கொள்ளையர்கள் சிலர் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், அங்கிருந்த நகைகளையும் கொள்ளையிட்டுக்கொண்டு தப்பிச் சென்றனர்.

காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கண்காணிப்பு கமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் பரிஸ் காவல்துறையினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்