பிளாக்மெயில் ஜி.வி.பிரகாசுக்கு கை கொடுக்குமா ''?
2 சித்திரை 2025 புதன் 14:11 | பார்வைகள் : 7920
அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' உதயநிதி நடித்த 'கண்ணை நம்பாதே' படத்தை இயக்கியவர் மு.மாறன். தற்போது அவர் இயக்கி வரும் படம் 'பிளாக் மெயில்'. இதில் ஜி.வி.பிரகாஷ் நாயகான நடிக்கிறார். 'என்ன சொல்ல போகிறாய்', 'பாரிஸ் ஜெயராஜ்' படங்களில் நடித்துள்ள தேஜு அஸ்வினி நாயகியாக நடிக்கிறார். பிந்து மாதவி இன்னொரு நாயகியாக நடிக்கிறார். படத்தை ஜெயக்கொடி பிக்சர்ஸ் சார்பில் அமல்ராஜ் தயாரிக்கிறார்.
லிங்கா, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா மற்றும் பலர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், கோகுல் பெனோய் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இசை அமைப்பில் தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். பிரமாண்ட பட்ஜெட்டில் அவர் தயாரித்து நடித்த 'கிங்ஸ்டன்' படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் சஸ்பென்ஸ் திரில்லர் ஜார்னரில் உருவாகி உள்ள 'பிளாக்மெயில்' படம் அவருக்கு கை கொடுக்குமா? என்பது மே மாதம் படம் வெளியான பிறகு தெரிய வரும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan