மரீன் லு பென் வழக்கு : நீதிபதிக்கு அச்சுறுத்தல்.. விசாரணைகள் ஆரம்பம்!!
2 சித்திரை 2025 புதன் 11:00 | பார்வைகள் : 4195
அரசியல் கட்சித்தலைவர் மரீன் லு பென்னுக்கு தகுதியின்மை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பொது நிதியை கட்சியின் நலனுக்கு பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு, ஐந்து ஆண்டுகள் இந்த ’தகுதியின்மை’ தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மரீன் லு பென்னின் ஆதரவாளர்கள் சிலர் இந்த தண்டனையை வழங்கிய நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இணையமூடாக வெறுப்பு பேச்சுக்களும், அவதூறு கருத்துக்களும் வெளியிடப்பட்டு வரும் இந்நிலையில், அவரது உயிருக்கு அச்சுறுத்தலான கருத்துக்களும் பொது வெளியில் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இணையவெளியில் தனி நபர்களுக்கு எதிரான குற்றங்களை அடக்குவதற்கான அமைப்பு (brigade de répression de la délinquance aux personnes) இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேற்படி செயலில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், €75,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan