பரிசில் இருந்து நியூயோர்க் நகருக்கு 3.5 மணிநேரத்தில் பயணம்.. எயார் பிரான்சின் அசத்தல் சேவை!

1 சித்திரை 2025 செவ்வாய் 18:00 | பார்வைகள் : 6107
எயார் பிரான்சுக்கு சொந்தமான புதிய AF9999 விமானம் மீண்டும் சேவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பரிசில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகருக்கு மூன்றரை மணிநேரத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை முதன் முறையாக இச்சேவை ஆரம்பிக்கப்பட்டதாகவும், விமான பயணத்தை நேரடியாக ரேடார் மூலம் கண்காணிக்கும் செயலியில், இந்த விமானம் John F. Kennedy விமான நிலையம் நோக்கி மின்னல் வேகத்தில் செல்வதை பயணிகள் நேரடியாக பார்த்துக்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 5,490 பேர் இதனை நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.
சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து ஜோன் எஃப். கென்னடி நிலையத்துக்கு மூன்றரை மணிநேரத்தில் பயணிகள் விமானம் ஒன்று பயணிக்க முடியுமா..?? இல்லை,. அது எட்டுமணிநேரத்துக்கும் அதிகமாக பயணிக்கும். இது ஒரு ‘முட்டாள்கள் தின’ பதிவு எனவும், குறித்த விமானம் சென்ற தரவு, கணணி மூலம் உருவாக்கப்பட்ட ’கிராஃபிக்ஸ்’ எனவும் எயார் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.