Saint-Denis : நகரசபை காவல்துறையினர் மீது - 20 பேர் கொண்ட குழு தாக்குதல்!!
1 சித்திரை 2025 செவ்வாய் 06:56 | பார்வைகள் : 12311
நகரசபை காவல்துறையினர் மீது 20 பேர் கொண்ட குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள Francs-Moisins குடியிருப்பு பகுதியில் நின்றிருந்த காவல்துறையினரை காடையர்கள் சிலர் தாக்கியுள்ளனர். கைகளில் தடி மாற்றும் இரும்பு கம்பிகளை கொண்டு தாக்கியுள்ளனர். காவல்துறையினர் அவர்களை கட்டுப்படுத்த கண்ணீர்புகை குண்டு வீசியுள்ளனர். மேலும் இறப்பர் குண்டுகளிலான LBD துப்பாக்கியினால் சுட்டுள்ளனர்.
ஆனால் அவர்கள் காவல்துறையினர் அமைத்திருந்த இரும்பு தடை கம்பிகளை தூக்கி காவல்துறையினர் மீது வீசினர். இரு காவல்துறையினர் மகிழுந்தில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.
மார்ச் 30, ஞாயிற்றுக்கிழமை மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

























Bons Plans
Annuaire
Scan