Paristamil Navigation Paristamil advert login

Orly : விமானத்துடன் மோதிய வாகனம்!!

Orly : விமானத்துடன் மோதிய வாகனம்!!

31 பங்குனி 2025 திங்கள் 13:27 | பார்வைகள் : 5741


Orly சர்வதேச விமான நிலையத்தில் நின்றிருந்த விமானம் ஒன்றுடன் வாகனம் ஒன்று மோதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்ச் 31, இன்று திங்கட்கிழமை காலை 7.02 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. EasyJet நிறுவனத்துக்குச் சொந்தமான A320 விமானத்துடன் கழிவு அகற்றும் வாகனம் ஒன்று மோதியுள்ளது. பயணிகள் ஏதுமின்றி தரித்து நின்ற விமானம் ஒன்றுடனே இந்த வாகனம் மோதியுள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. குறித்த விமானம் நண்பகல் 12.15 மணிக்கு பயணிக்க தயாராக இருந்த நிலையில், இவ்விபத்து ஏற்பட்டதால் - விமான பயணம் ரத்துச் செய்யப்பட்டது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்