2027 அரசுத்தலைவர் கனவு கலைந்தது, நான்கு ஆண்டுகள் சிறை, Marine Le Pen
31 பங்குனி 2025 திங்கள் 12:53 | பார்வைகள் : 7427
தீவிர வலதுசாரி கட்சியின் அரசத்தலைவர் வேட்பாளரும், முன்னாள் தலைவரும் 2027-ல் பிரான்ஸினுடைய அரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அரசதலைவராக ஆட்சியைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட
Rassemblement national கட்சியின் நிறுவனர் Marine Le Pen அவர்கள். ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒதுக்கப்பட்ட நிதியை தனது சொந்தக் கட்சியின் தேவைக்கு பயன்படுத்திய குற்றத்திற்காக பெரும் வழக்கு ஒன்றினை எதிர்கொண்டிருந்தார்.
அதன் தீர்ப்பு என்று பாரிசின் உச்ச நீதிமன்றத்தில் இன்று விளங்கப்பட்டது. இதில் Marine Le Pen அவர்களின் குற்றங்கள் தற்போதைய நிலையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் இரண்டு ஆண்டுகள் சிறைச்சாலையிலும் இரண்டு ஆண்டுகள் 'Bracelet électronique' இரத்திரன் இயல் பாதுகாப்பு பொருத்தப்பட்ட நிலையில் நடமாட வேண்டிய கட்டாய நிலையிலான தீர்ப்பும் வழங்கப்பட்டது. அத்தோடு ஐந்து ஆண்டுகள் அரசியலில் எந்த ஒரு தேர்தலிலும் அவர் போட்டியிட முடியாது அதாவது 2027 நடைபெற இருக்கும் அரசு தலைவர் தேர்தலிலும் போட்டியிட முடியாது. அத்துடன் 100,000€ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக தான் மேல்முறையீடு செய்ய உள்ளதாக Marine Le Pen தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய தகவல்கள் விரைவில் எம்மோடு இணைந்து இருங்கள் paristamil.com


























Bons Plans
Annuaire
Scan