நடு இரவில் நடிகையோடு ஜாலி ரைடு போன தனுஷ்!
31 பங்குனி 2025 திங்கள் 10:42 | பார்வைகள் : 4861
நடிகை தனுஷ், தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே அடுத்த படத்தில் கமிட் ஆகி விடுகிறார். அந்த வகையில், இட்லி கடை முடிவடைந்த கையேடு பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகி வரும் ’Tere Ishk Mein’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாதமாக, இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது
அந்த வகையில் தற்போது டெல்லியில் காதல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஹீரோயின் கிருத்தி சனோன் இருவரும் பைக்கில் பயணிக்கும் காட்சி படமாக்கப்பட்டுளள்து. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் இந்தியில், கடந்த 2013 ஆம் வெளியான 'ராஜண்ணா' மற்றும் 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து இவர் நடிக்கும் மூன்றாவது பாலிவுட் படமான Tere Ishk Mein, ஏற்கனவே இவர் நடிப்பில் ரிலீஸ் ஆன, 'ராஜண்ணா' படத்தின் 2-ஆம் பாகம் என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யவது போலவே தனுஷின் லுக்கும் அமைந்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன. பகல் நேரங்களில் ஷூட்டிங் நடத்தினால் கூட்டம் கூடிவிடும் என்பதால், இரவு நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ், சேகர் கமுலா இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'குபேரா' திரைப்படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதை தவிர, ஹோலிவுடில் 'ஸ்ட்ரீட் பைட்டர்', என்கிற படத்திலும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.--
🔥 இன்றைய சிறப்பு சலுகை
எழுத்துரு விளம்பரங்கள்
À vendre : bail d’un salon
À vendre : bail d’un salon de beauté d’une surface de 30 m² situé à Fontenay-sous-Bois.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan