வருங்கால கணவரின் புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை!
30 பங்குனி 2025 ஞாயிறு 15:10 | பார்வைகள் : 3205
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் நடிகை அபிநயா. இவர் பிறவியிலேயே காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.
அதைத்தொடர்ந்து இவர் ஈசன், வீரம், ஏழாம் அறிவு, தனி ஒருவன், பூஜை, மார்க் ஆண்டனி என பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக ஆதி நடிப்பில் வெளியான சப்தம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வரும் அபிநயா, விஷாலை காதலிப்பதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ஆனால் அதனை மறுத்த அபிநயா, 15 வருடங்களாக நெருங்கிய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக கூறியிருந்தார். அதன்படி அபிநயாவுக்கு ஐதராபாத் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , தனது வருங்கால கணவருடன் நிச்சயதார்த்தத்தின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதைப் பார்த்த பார்த்த பலரும் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று சொல்லி அபிநயாவிற்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறப்போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan