'சர்தார் 2' படத்திலிருந்து திடீரென விலகிய யுவன் ?
30 பங்குனி 2025 ஞாயிறு 14:40 | பார்வைகள் : 3667
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சர்தார் 2'. 2022ல் வெளிவந்த முதல் பாகத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். ஆனால், இரண்டாவது பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜாவை இசையமைப்பாளராக நியமித்தனர்.
இதனிடையே, தற்போது இப்படத்திலிருந்து யுவனை நீக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக அவரைத் தொடர்பு கொள்ள முயலும் போதெல்லாம் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகச் சொல்கிறார்கள். யுவன் சென்னையை விட்டு துபாயில் செட்டிலாகிவிட்டார். அவரிடம் பாடல்களைக் கேட்டு வாங்குவதில் அவ்வளவு சிரமமாக உள்ளதாம்.
'சர்தார் 2' நீண்ட நாட்கள் காத்திருந்தும் கிடைக்கவில்லையாம். அதனால், இப்போது சாம் சிஎஸ்-ஐ படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்.விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளதாம். அப்போது அதற்கு யார் இசையமைத்துள்ளார்கள் என்பது தெரிந்துவிடும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan