புயல் - பனிப்பொழிவு - நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
30 பங்குனி 2025 ஞாயிறு 06:51 | பார்வைகள் : 11653
இன்று மார்ச் 30 - ஞாயிற்றுக்கிழமை நாட்டின் தெற்கு பகுதிகளில் பனிப்பொழிவு பதிவாகும் எனவும், சில மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Ariège, Haute-Garonne , Pyrénées-Atlantiques மற்றும் Hautes-Pyrénées ஆகிய நான்கு மாவட்டங்களில் பனிப்பொழிவு பதிவாகும் என வானிலை அவதானிப்பு மையம் அறிவித்துள்ளது.

மேலும், Ardèche, Aude, Bouches-du-Rhône , Drôme, Gard, Pyrénées-Orientales மற்றும் Vaucluse ஆகிய ஏழு மாவட்டங்களில் புயல் காற்று வீசும் எனவும், அங்கு 70 தொடக்கம் அதிகபட்சமாக 110 கி.மீ வேகம் வரைக்கும் புயல் வீசும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த மாவட்டங்கள் அனைத்திற்கும் ‘மஞ்சள்’ நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Coupons
Annuaire
Scan