Paristamil Navigation Paristamil advert login

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு - விஜய் கட்சி தீர்மானம்

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு - விஜய் கட்சி தீர்மானம்

29 பங்குனி 2025 சனி 09:29 | பார்வைகள் : 2656


இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

உறுதிமொழியோடு தொடங்கிய கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 2,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கட்சி தொடங்கப்பட்ட பின்பு நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

பொதுக்குழு கூட்டத்தில், மாநில அரசுகளுக்கான அதிகாரத்தை பகிர்ந்தளிக்க வேண்டும், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தேவையில்லை, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு , மீனவர்கள் போராட்டத்துக்கு தீர்வு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும் உள்பட மொத்த 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்