பரிஸ் : ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு கொள்ளைச் சம்பவங்கள்!!
28 பங்குனி 2025 வெள்ளி 17:19 | பார்வைகள் : 5546
பரிசில் நேற்று மார்ச் 27, lஒரே நாளில் சிலமணிநேர இடைவெளியில் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
முதலாவது சம்பவம் பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் Rue de la Pompe வீதியில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள வீடொன்றுக்குள் நேற்று காலை 8.55 மணி அளவில் நுழைந்த கொள்ளையர்கள் இருவர், அங்கிருந்த கணவன் மனைவி இருவரை கட்டிவைத்துவிட்டு கொள்ளையிட முற்பட்டனர். இதன்போது கொள்ளையர்களுடன் மோதலில் ஈடுபட்ட குறித்த பெண், கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். கொள்ளையர்கள் எதனையும் கொள்ளையிடமால் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இரண்டாவது சம்பவம் rue Leroux வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்தவர்களை கட்டிவைத்துவிட்டு அவர்களிடம் இருந்து வங்கி அட்டைகள், நகைகள், பணம் போன்றவற்றை கொள்ளையிட்டுச் சென்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan