மஹிந்தவின் தவறுகளை அம்பலப்படுத்திய நாமல்

28 பங்குனி 2025 வெள்ளி 15:32 | பார்வைகள் : 2325
மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது திருமதி ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
முந்தைய அரசாங்கங்கள் செய்தது போல் தற்போதைய அரசாங்கம் தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.
தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்க ஆளும் கட்சி சமர்ப்பித்த முன்மொழிவு தொடர்பான விவரங்களை வழங்கும்போதே, நாமல் ராஜபக்ஷ இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
வரலாற்றில் சில அதிகாரிகள் தொடர்பாக எடுக்கப்பட்ட சில அரசியல் முடிவுகள் தவறாக இருந்தன. ஒரு கட்சியாக, அந்த தவறான அரசியல் முடிவுகளின் விளைவுகளை நாம் இன்னும் அனுபவித்து வருகிறோம்.
பொலிஸ்மா அதிபருடன் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அதை அரசியலமைப்பு ரீதியாகக் கையாள முடியும். ஒருபுறம், அவர் மீது நீதிமன்ற வழக்கு உள்ளது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்யலாம் என்றார்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025