நெதர்லாந்தில் கத்திக்குத்து- ஐவர் காயம்- இளைஞன் கைது
28 பங்குனி 2025 வெள்ளி 14:09 | பார்வைகள் : 7890
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமின் மையப்பகுதியல் நடத்தப்டப்ட கத்திக்குத்து சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று வியாழக்கிழமை (27) டேம் சதுக்கத்திற்கு அருகிலுள்ள சிண்ட் நிக்கோலாஸ்ட்ராட்டில் சந்தேக நபர் பலரை கத்தியால் குத்தியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 67 வயது பெண் மற்றும் 69 வயது ஆண் இருவரும் அமெரிக்க நாட்டவர்கள், 26 வயதுடைய போலந்தைச் சேர்ந்த ஆண், 73 வயதுடைய பெல்ஜியத்தைச் சேர்ந்த பெண் மற்றும 19 வயதுடைய ஆம்ஸ்டர்டாமைச் சேர்ந்த பெண் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஆம்ஸ்டர்டாம் பொலிஸார் தெரிவித்தனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan