Paristamil Navigation Paristamil advert login

Bobigny - Noisy-le-Sec : ட்ராம் சேவைகள் தடை தொடர்கிறது!!

Bobigny - Noisy-le-Sec : ட்ராம் சேவைகள் தடை தொடர்கிறது!!

28 பங்குனி 2025 வெள்ளி 13:22 | பார்வைகள் : 17450


T1 ட்ராம் சேவைகள் திருத்தப்பணிகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை மார்ச் 31 ஆம் திகதி குறித்த சேவைகள் வழமைக்குத் திரும்பும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த தடை மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Bobigny முதல்  Noisy-le-Sec வரை இயங்கும் T1 ட்ராம் சேவைகளே இவ்வாறு தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி வரை இந்த சேவைகள் தடைப்படும் எனவும், கடந்த ஆறு மாதங்கள் போல் அடுத்துவரும் மூன்று வாரங்களுக்கும் பேருந்து சேவைகள் மாற்றாக சேவையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பணிகள் ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகளாக சமிக்ஞை விளக்குகளின் செயற்பாடுகள் குறித்து கண்காணிக்கும் பணிகள் மீதம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்