எம்பாபேக்கு லண்டனில் மெழுகு சிலை!!
27 பங்குனி 2025 வியாழன் 13:26 | பார்வைகள் : 5287
பிரெஞ்சு உதைபந்தாட்ட வீரரும் அணியின் தலைவருமான Kylian Mbappé இற்கு லண்டனில் மெழுகு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் திகதி தனது உருவச்சிலையை திறந்து வைக்க Mbappé லண்டன் செல்லவுள்ளார். ரொனால்டோ, ஹமில்டன், டேவிட் பெக்காம் போன்ற வீரர்களின் வரிசையில் எம்பாபேயின் மெழுகு சிலையை நிர்மாணித்துள்ளது லண்டனின் பிரபலமான Madame Tussauds மெழுகு அருங்காட்சியகம்.

பிரெஞ்சு அணியின் வெள்ளை நிற சீருடையும், நீல நிற காற்சட்டையும், காலுறையுடன் சப்பாத்தும் அணிந்து, கையை கட்டிக்கொண்டு நிற்பது போன்று மிக அபாரமாக இந்த சில வடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் அதனை பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

























Bons Plans
Annuaire
Scan