மெல்ல மெல்ல சீரடையும் மருந்துத்தட்டுப்பாடு!!

27 பங்குனி 2025 வியாழன் 10:59 | பார்வைகள் : 3430
பிரான்சில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு மெல்ல மெல்ல குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் 19 காலம் முதல் பிரான்சில் பல்வேறு மருந்துகளுக்கான தட்டுப்பாடு நிலவியிருந்தது. 800 வெவ்வேறு வித மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியிருந்ததாகவும், மருந்தகங்களில் அவை எளிதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த தட்டுப்பாடு மெல்ல மெல்ல சீரடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்ற வருடம் 400 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியிருந்தது. இந்நிலையில் அது தற்போது 250 ஆக குறைந்துள்ளது.
பிரான்சில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள 17,000 மருந்துகளில் அத்தியாவசியமான மருந்துகள் அனைத்தும் தட்டுப்பாடின்றி கிடைப்பதாக மருந்துகளுக்கான தேசிய ஆணையகம் அறிவித்துள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1