மிக மிக அரிதான புற்றுநோயினால் உயிரிழந்த நடிகை எமிலி...!!

26 பங்குனி 2025 புதன் 20:00 | பார்வைகள் : 4324
பெல்ஜிய திரைப்பட நடிகை Emilie Dequenne, கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்திருந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று 26 ஆம் திகதி புதன்கிழமை பரிசில் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.
43 வயதுடைய எமிலி, மிக அரிதான புற்றுநோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார். இந்நிலையில் அவரது இறுதிச் சடங்கு பரிசில் உள்ள Père-Lachaise கல்லறையில் இடம்பெற்றிருந்தது. இதில் எமிலியின் குடும்பத்தினரும், சில திரைப்பட பிரபலங்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சிறுநீரகம் மேல் அமைந்துள்ள நாளமில்லா சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோயை Adrenocortical carcinoma அல்லது ACC என அழைக்கப்படுகிறது. மிக மிக அரிதான இந்த புற்றுநோயினால் எமிலி உயிரிழந்திருந்தார். அவரது குடும்பத்தினர், மேற்படி புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு நன்கொடை வழங்க பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1