அவதானம் : பயணப்பெட்டியை மறந்து விட்டுச் சென்றால்.. 1,500 யூரோக்கள் அபராதம்!!
26 பங்குனி 2025 புதன் 18:00 | பார்வைகள் : 4904
தொடருந்து பயணங்களின் போது உங்களது பயணப்பெட்டிகளை விட்டுச் சென்றால் 1,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்பட்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடருந்துகளில் பொதிகளை மறந்து விட்டுச் செல்லுதல் - தொடருந்து போக்குவரத்துக்கள் தாமதங்களைச் சந்திப்பதற்கு பெரும் காரணமாக அமைகிறது. இதனக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது,. பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமாற்றத்துக்கு ஆதரவாக வாக்குகள் பதிவானதை அடுத்து மிக விரைவாக நடைமுறைக்கு வரும் வீதம் இது சட்டமாக்கப்பட்டுள்ளது.
பொதிகளை மறந்து விட்டுச் செல்வது முதன் முறை என்றால் 75 யூரோக்கள் குற்றப்பணமும், இரண்டாம் முறை 180 யூரோக்களும், மூன்றாம் முறை 1,500 யூரோக்களும் குற்றப்பணமாக அறவிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan