Paristamil Navigation Paristamil advert login

Évry : பெற்றோல் எரிகுண்டுடன் மாணவன் கைது!!

Évry : பெற்றோல் எரிகுண்டுடன் மாணவன் கைது!!

26 பங்குனி 2025 புதன் 08:00 | பார்வைகள் : 5072


உயர்கல்வி மாணவன் ஒருவர் லீசேக்கு பெற்றோல் எரிகுண்டு எடுத்துவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மார்ச் 25,  நேற்று செவ்வாய்க்கிழமை காலை இக்கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. Évry (Essonne) நகரில் உள்ள Montesquieu லீசேக்கு பெற்றோல் எரிகுண்டுடன் மாணவன் ஒருவர். வருகை தந்துள்ளார். காலை 8.30 மணி அளவில் காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். லீசேக்கு விரைந்து வந்த காவல்துறையினர் குறித்த மாணவனை சோதனையிட்டனர். அதன் போது இலகுவில் தீப்பற்றி எரியக்கூடிய பெற்றோல் எரிகுண்டு, கூரான கத்தி ஒன்று அத்துடன், சுத்தியல் போன்ற பொருட்களை எடுத்துவந்திருந்தமை தெரியவந்தது.

உடனடியாக மாணவன் கைது செய்யப்பட்டார். காலை 10 மணி வரை கல்விச் செயற்பாடுகள் தடைப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்