சீரற்ற காலநிலை : 2024 ஆம் ஆண்டில் €5 பில்லியன் யூரோக்கள் காப்பீடு!!
26 பங்குனி 2025 புதன் 08:12 | பார்வைகள் : 5353
இயற்கை அனர்த்தங்களுக்காக காப்பீடு வழங்கும் தொகை கடந்த 2024 ஆம் ஆண்டில் €5 பில்லியன் யூரோக்கள் எட்டியதாக பிரெஞ்சு காப்புறுதிகளுக்கான கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
ஆலங்கட்டி மழை, இடி மின்னல் தாக்குதல்கள், வெள்ளம், பனிப்பொழிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் காப்புறுதிகளே €5 பில்லியனை எட்டியுள்ளது. எவ்வாறாயினும் 2020 முதல் 2023 ஆம் ஆண்டுவரையான ஆண்டுகள் பதிவான சராசரி தொகையை விட (€5.6 பில்லியன் யூரோக்கள்) இது குறைவாகும்.
இவற்றுள் புயல் மற்றும் பனிப்பொழிவினால் ஏற்பட்ட சேதங்களுக்கான காப்புறுதித்தொகை மட்டும் €2.2 பில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.
1982-1989 ஆண்டுகளில் சராசரியாக €1.5 பில்லியன் யூரோக்களாக இந்த தொகை பதிவாகியிருந்தது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் திருமதி,ஏகாம்பரம் சிரோன்மணி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 76
இறப்பு : 02 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan