கோடநாடு வழக்கு; வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்
25 பங்குனி 2025 செவ்வாய் 10:15 | பார்வைகள் : 3343
கோடநாடு வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், கூடுதல் தகவல்களை பெறும் வகையில் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள், பெருமாள் சாமி ஆகியோரை விசாரித்தனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan