முன்னாள் பிரதமரின் சாதனையை முறியடியத்த பிரான்சுவா பெய்ரூ!!

24 பங்குனி 2025 திங்கள் 14:09 | பார்வைகள் : 6238
முன்னாள் பிரதமர் மிஷல் பார்னியே பிரான்சின் மிக குறுகியகால பிரதமராவார். அவரது சாதனையை பல்வேறு நம்பிக்கை இல்லா பிரேரணைகளைச் சந்தித்து தற்போதைய பிரதமர் பிரான்சுவா பெய்ரூ முறியடித்துள்ளார்.
பிரான்சுவா பெய்ரூ பிரதமராக பொறுப்பேற்று நேற்று மார்ச் 23 ஆம் திகதியுடன் 100 நாட்கள் ஆகின்றன. இதுவரை பல நம்பிக்கை இல்லா பிரேரணைகளைச் சந்தித்த அவர், இதுவரை தாக்குப்பிடிததே பெரும் சாதனை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சோசலிச கட்சிகள் நம்பிக்கை இல்லா பிரேரணைகளுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இருக்கின்றனர். இதனால் மூன்றாவது பெரும்பான்மை கொண்ட பெய்ரூவின் அரசாங்கம் தாக்குப்பிடிக்கிறமை குறிப்பிடத்தக்கது.