Paristamil Navigation Paristamil advert login

அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறிய டக்ளஸ் - முடிவில் திடீர் மாற்றம்

அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறிய  டக்ளஸ் - முடிவில் திடீர் மாற்றம்

24 பங்குனி 2025 திங்கள் 12:07 | பார்வைகள் : 5922


அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக கூறி வந்த டக்ளஸ் தற்போது அந்த முடிவை கைவிடுவதாக அறிவித்துள்ளார்.

உடல் நிலை காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்குவது தொடர்பாக கடந்த சில வருங்களாக சிந்தித்த போதிலும், கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை சவாலாக எடுத்து செயற்பட்டு வருவதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் போன்று விடயங்களை முன்னெடுப்பதற்கான அரசியல் அதிகாரம் தற்போது இல்லாத போதிலும், அண்மைய அரசியல் பின்னடைவை சவாலாக எடுத்து அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் பின்னராக நடைப்பிணமாக டக்ளஸ் மாறியிருப்பதாக அவரது கட்சி ஆதரவாளர்கள் கவலை கொண்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்